கொழும்பில் உணவக உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு நபர் ஒருவர் தப்பி ஓட்டம்!

கொழும்பு மாவட்டம் இரத்மலானையில் உணவக உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு , கொலையாளி தப்பியோடியதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் மொஹமட் பாயிஸ் என்ற பேக்கரி உரிமையாளரே கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான உணவக உரிமையாளர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக கல்கிஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.